ADDED : அக் 10, 2024 08:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழக கவர்னர் ரவி, 72, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.
அவருக்கு, சில மருத்துவ பரிசோதனைகள் நடந்தன. பரிசோதனைகள் முடிந்து, ஒரு மணி நேரத்திற்கு பின், கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.
அவர் மருத்துவமனைக்கு சென்ற போது, மருத்துவ பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப் படவில்லை.
வழக்கமான பரிசோதனைகளுக்காவே, கவர்னர் ரவி வந்ததாக மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்படுகிறது.