ADDED : டிச 28, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அண்ணா பல்கலையில், மாணவி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம், நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், கவர்னர் ரவி இன்று பகல் 12:30 மணிக்கு, அண்ணா பல்கலை செல்கிறார். அங்கு பல்கலை உள் பாதுகாப்பு குழுவினர், பாதுகாவலர்கள், விடுதி மாணவர்கள் உள்ளிட்டோரிடம், சம்பவம் குறித்து விசாரிப்பதுடன், பாதுகாப்பை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.