sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம்

/

ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம்

ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம்

ஊராட்சிகளில் இன்று கிராம சபை கூட்டம்


ADDED : நவ 22, 2024 11:54 PM

Google News

ADDED : நவ 22, 2024 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:உள்ளாட்சி தினத்தில் நடக்கவிருந்த, கிராம சபை கூட்டம், இன்று நடைபெற உள்ளது.

தமிழகத்தில், சென்னை மாநகரை தவிர, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஊராட்சிகளில், ஜனவரி, 26 குடியரசு தினம்; மார்ச் 22 உலக தண்ணீர் தினம்; மே 1 தொழிலாளர் தினம்; ஆக., 15 சுதந்திர தினம்; அக்., 2 காந்தி பிறந்த தினம்; நவம்பர், 1 உள்ளாட்சிகள் தினம் என, ஆறு நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.

தீபாவளி பண்டிகைக்கு மறுநாள், நவம்பர், 1 அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டதால், அன்றைய தினம் கிராம சபை கூட்டம் நடக்கவில்லை. அதற்கு பதிலாக, இம்மாதம் 23ம் தேதி கிராம சபை கூட்டம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை, 11:00 மணிக்கு, அனைத்து ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது.

கூட்டத்தில், பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது உட்பட, பல்வேறு தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.






      Dinamalar
      Follow us