மழை ஏற்படுத்திய மாற்றத்தால் பசுமையான தேயிலை தோட்டங்கள்
மழை ஏற்படுத்திய மாற்றத்தால் பசுமையான தேயிலை தோட்டங்கள்
ADDED : ஜன 16, 2024 01:17 AM

மூணாறு : மூணாறில் பனிபொழிவால் பசுமையை இழக்கும் நேரத்தில் மழை ஏற்படுத்திய மாற்றத்தால் தேயிலை தோட்டங்கள் பசுமையுடன் காட்சியளிக்கின்றன.
மூணாறில் ஆண்டு தோறும் நவம்பரில் குளிர் காலம் துவங்கி பிப்ரவரி இறுதி வரை நீடிக்கும். அப்போது டிச., இறுதி மற்றும் ஜன., முதல் இரண்டு வாரத்திற்குள் வெப்பம் மைனஸ் டிகிரி செல்சியஸ் குறைந்து உறைபனி ஏற்படும். அதனால் தேயிலை செடிகள், புல்மேடுகள், செடி, கொடிகள் என அனைத்தும் கருகி பசுமையை இழந்து விடும்.
கடந்தாண்டு டிச.,30 முதல் ஜன.,9 முதல் தொடர்ந்து பத்து நாட்கள் உறைபனி ஏற்பட்டது. இந்தாண்டு தற்போது வரை மழை பெய்வதால் உறைபனிக்கு வாய்ப்பு இன்றி போனது.
நேற்று முன்தினம் காலை குறைந்தபட்ச வெப்பம் 13 டிகிரியாக இருந்த நிலையில் நேற்று காலை 6 டிகிரி செல்சியஸ் ஆக குறைந்தது. இருப்பினும் பகலில் மழை மேகம் சூழ்ந்ததால் வரும் நாட்களிலும் குளிர் குறைய வாய்ப்பில்லை.
தற்போது பெய்யும் மழை தேயிலை சாகுபடிக்கு மிகவும் ஏற்றதாக அமைந்தது. அதனால் பனிபொழிவால் பசுமையை இழக்கும் நேரத்தில் மழை ஏற்படுத்திய மாற்றத்தால் தேயிலைத் தோட்டங்கள்பசுமையுடன் காட்சியளிக்கின்றன.