ஜி.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் 60ம் ஆண்டு நிறைவு பழைய தங்க நகைகளை மாற்ற சிறப்பு சலுகை
ஜி.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் 60ம் ஆண்டு நிறைவு பழைய தங்க நகைகளை மாற்ற சிறப்பு சலுகை
ADDED : பிப் 06, 2025 01:48 AM
சென்னை:ஜி.ஆர்.டி., ஜுவல்லர்ஸின் 60ம் ஆண்டு நிறைவையொட்டி, பழைய தங்க நகைகளை மாற்றினால், கிராமுக்கு 75 ரூபாய் கூடுதலாக வழங்கும், சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1964ல் துவங்கப்பட்ட, தமிழகத்தின் முன்னணி நகைக் கடையான, ஜி.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
ஜி.ஆர்.டி.,யின் தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி, ரத்தின கற்கள் ஆகியவற்றால் செய்யப்பட்ட, வகை, வகையான நகைகள், வாடிக்கையாளர்களின் இதயங்களை வென்றுள்ளது.
இந்தியா, சிங்கப்பூரில் 61 கிளைகளுடன், நகைத் துறையில் தனக்கென தனி அடையாளத்துடன், ஜி.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் பிரகாசிக்கிறது.
60ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, பழைய தங்க நகைகளை மாற்றி, புதிய நகைகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு கிராமுக்கு கூடுதலாக 75 ரூபாய் சிறப்பு சலுகையை, ஜி.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் அறிவித்துள்ளது. ஸ்வர்ண அவதாரம் என்ற பெயரில், இந்த சலுகை வழங்கப்படுகிறது.
இந்த சலுகையை துவக்கி வைத்த, ஜி.ஆர்.டி., ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குனர்கள் ஜி.ஆர்.ஆனந்த், ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர், 'இந்த குறுகிய கால சலுகை, பழைய தங்க நகைகளை மாற்றுவோருக்கு மட்டுமே பொருந்தும். தங்க நாணயங்கள், தங்க கட்டிகளுக்கு, இது பொருந்தாது.
'இந்த சலுகையால் பழைய தலைமுறையின் நினைவான, பழைய தங்க நகைகள் விலை மதிப்பற்றதாக மாறுகிறது. வாடிக்கையாளர்களின் பழைய தங்க நகைகளுக்கு, புதிய அவதாரத்தை கொடுக்கிறோம்' என்றனர்.