இன்ஸ்டாகிராமில் துப்பாக்கி விற்பனை; நெல்லையில் திமுக பிரமுகர் உள்பட 2 பேர் கைது
இன்ஸ்டாகிராமில் துப்பாக்கி விற்பனை; நெல்லையில் திமுக பிரமுகர் உள்பட 2 பேர் கைது
ADDED : ஜன 14, 2026 02:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லை: நெல்லையில் இன்ஸ்டாகிராம் மூலமாக துப்பாக்கி விற்க முயன்ற திமுக பிரமுகர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலப்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக துப்பாக்கியை விற்கும் முயற்சி நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மேலப்பாளையம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில், அதே பகுதியைச் சேர்ந்த அமீர் மற்றும் திமுக பிரமுகர் ரத்ன பாலா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து சட்டவிரோதமாக இருந்த துப்பாக்கியையும் கைப்பற்றினர்.
விசாரணையில், இந்தத் துப்பாக்கி வடமாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்டதும், இன்ஸ்டாகிராம் விற்பதற்காக விளம்பரம் செய்ததும் தெரிய வந்தது. மேலும், ஏதேனும் சதிச் செயலுக்கு திட்டமிட்டார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

