ADDED : மார் 19, 2024 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நல்லாக்கவுண்டன்நகர் சிவாஜி பஸ் ஸ்டாண்ட் அருகே டீ கடை நடத்துகிறார். இங்கு திண்டுக்கல் விஜயகுமார், பண்ணைப்பட்டி முத்து, மல்லையன், ஒட்டன்சத்திரம் செல்லபாண்டியன், வேடசந்துார் சக்திவேல் சில ஆண்டுகளாக வேலை செய்தனர்.
கடையில் பழுதான கண்காணிப்பு கேமராவை சரி செய்த போது மேற்கண்ட 5 பேரும் கல்லாப்பெட்டியில் இருந்து பணம் கையாடல் செய்தது பதிவாகி இருந்தது. சிறிது சிறிதாக ரூ.10 லட்சம் வரை கையாடல் செய்துள்ளனர். விஜயகுமார், மல்லையன், செல்லபாண்டியன், சக்திவேலை போலீசார் கைது செய்தனர். முத்துவை தேடிவருகின்றனர்.

