UPDATED : நவ 07, 2026 06:21 PM
ADDED : நவ 07, 2026 06:17 PM

பிரம்மா குமாரிகள் தமிழ்நாடு மண்டலத்தின் சேவை ஒருங்கிணைப்பாளர் பி.கே.பீனா வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து:
ஒளிமயமான உலகம், நமக்குள் இருந்தே தொடங்குகிறது. எங்கள் அன்பான தெய்வீகமான ஒளி தீபங்களுக்கு.
உங்கள் வாழ்க்கை துாய்மையால் மிளிரட்டும். தெய்வீகத்தால் ஒளிரட்டும். இந்த தீபாவளியில், நமக்குள் இருந்து உலகை ஒளிமயமாக்குவோம். வீடுகளை விளக்குகளால் அலங்கரிப்பதோடு, நம் மனதையும், நேர்மறையான எண்ணங்களால் ஒளிரச் செய்வோம். பரிசுகளை பரிமாறிக் கொள்வதோடு, நல் ஆசீர்வாதங்களையும் பகிர்ந்து கொள்வோம். இனிப்புகளை பகிர்ந்து கொள்வதோடு, வார்த்தைகளிலும் செயல்களிலும் இனிமையையும் பணிவையும் வெளிப்படுத்துவோம். தெய்வீக நற்குணங்கள் நிறைந்த வாழும் விளக்குகளாக மாறி, நாம் செல்லும் இடமெல்லாம் அன்பு, அமைதி மற்றும் மகிழ்ச்சியை பரப்புவோம். ஒளித் திருநாளைக் கொண்டாடுவதோடு, ஒருவருடைய வாழ்க்கையிலும் ஒளியேற்றும் ஆதாரமாக மாறுவோம். உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும் ஆன்மிக ஒளியும் நிறைந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
