‘வெற்றி கமிஷன்’ திட்டத்தை த.வெ.க., தொடங்கி உள்ளதா?
‘வெற்றி கமிஷன்’ திட்டத்தை த.வெ.க., தொடங்கி உள்ளதா?
ADDED : நவ 04, 2026 07:57 PM
சிவகங்கையில், 20 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை வழங்க, 20 சதவீதம் வரை கமிஷன் கேட்பதாக, த.வெ.க., – எம்.எல்.ஏ., குழந்தை ராணி மீது புகார் எழுந்துள்ளது. தமிழகம் முழுதும், எம்.எல்.ஏ.,க்கள் தொடங்கி, கட்சி நிர்வாகிகள் வரை, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது, கமிஷன் கேட்பது, அதிகாரிகளை மிரட்டுவது என, அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவதாக, ஒப்பந்ததாரர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஊழலை ஒழிக்க வந்ததாக கூறும் துாய சக்தி ஆட்சி, 20 சதவீத கமிஷன் பெற, ‘வெற்றி கமிஷன் திட்டத்தை’ தொடங்கியுள்ளதா? ‘யாராவது லஞ்சம் கேட்டால், இது உங்கள் விஜய் ஆட்சி என சொல்லி லஞ்சம் கொடுக்காதீர்’ என்று மக்களுக்கு அறிவுரை கூறிய முதல்வர் விஜய், தன் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அலட்சியப்படுத்தியதால், 20 சதவீத கமிஷன் என்ற பெயரில் ‘சர்வீஸ் சார்ஜ்’ கேட்கும் அளவிற்கு, நிலைமை மோசமடைந்துள்ளது.
– தினகரன்,
பொதுச்செயலர், அ.ம.மு.க.,
