sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சி.பி.ஐ., விசாரணை கோரிய மனு தள்ளுபடி கரூர் சம்பவ விவகாரத்தில் ஐகோர்ட் அதிரடி

/

சி.பி.ஐ., விசாரணை கோரிய மனு தள்ளுபடி கரூர் சம்பவ விவகாரத்தில் ஐகோர்ட் அதிரடி

சி.பி.ஐ., விசாரணை கோரிய மனு தள்ளுபடி கரூர் சம்பவ விவகாரத்தில் ஐகோர்ட் அதிரடி

சி.பி.ஐ., விசாரணை கோரிய மனு தள்ளுபடி கரூர் சம்பவ விவகாரத்தில் ஐகோர்ட் அதிரடி


ADDED : அக் 04, 2025 01:17 AM

Google News

ADDED : அக் 04, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:'அரசு நிலையான வழிகாட்டுதல் உருவாக்கும் வரை,தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில், எந்த ஒரு அரசியல் கட்சிக்கும், எவ்வித பொதுக்கூட்டமும் நடத்த அனுமதி வழங்கக்கூடாது' என, உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை கோரிய மனுவையும் தள்ளுபடி செய்தது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில், கரூர் ராமனுார் செந்தில்கண்ணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:

கரூர் வேலுச்சாமிபுரத்தில் செப்., 27ல் நடந்த த.வெ.க., தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 அப்பாவிகள் பலியாகினர்.

அனுமதி தரக்கூடாது பொதுக்கூட்டங்களுக்கு நிலையான வழிகாட்டுதல் அல்லது திட்டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்படும் வரை, த.வெ.க., சார்பில் எந்த ஒரு பொதுக்கூட்டம் அல்லது ஊர்வலம் நடத்தவும், டி.ஜி.பி., அனுமதி வழங்கக்கூடாது.

அரசியல் கட்சிகள் அல்லது அமைப்புகள் பொதுக்கூட்டங்கள், ஊர்வலம் நடத்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள மற்றும் நிலையான வழிகாட்டுதல்களை செயல்படுத்த டி.ஜி.பி.,க்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இதுபோல, மதுரையைச் சேர்ந்த ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், 'கரூர் த.வெ.க., கூட்டத்தில் மரணமடைந்தவர்களுக்கு தலா 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

'சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, கோரியிருந்தார். சென்னை வழக்கறிஞர் மணி தாக்கல் செய்த மனுவில், 'சி.பி.ஐ., அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரணை வேண்டும்.

'பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்' என, கோரியிருந்தார்.

இந்த மனுக்களை, நீதிபதிகள் எம்.தண்ட பாணி, எம்.ஜோதிராமன் அமர்வு விசாரித்தது.

மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் பிரவீன் குமார், அமரவேல் பாண்டியன், பாக்கியமுத்து, வெங்கடேசன், தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், அரசு பிளீடர் திலக்குமார், சி.பி.ஐ., தரப்பில் வழக்கறிஞர் முகைதீன்பாஷா ஆஜராகினர்.

என்.ஆர்.இளங்கோ: சம்பவம் நடந்து ஒரு வாரமாகிறது. பொய், வதந்திகளை சிலர் பரப்பு கின்றனர். ரத்தக்கறை கூட காயவில்லை. அதற்குள் சி.பி.ஐ., விசாரணை கோருகின்றனர்.

அம்மனு ஏற்கத்தக்க தல்ல. சம்பவத்திற்கு மாநில அரசு அல்லது போலீசார் தான் காரணம் என, மனுதாரர்கள் தரப்பில் யாரும் கூறவில்லை.

பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த நிலையான வழிகாட்டுதல் உருவாக்குவது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அதை பரிசீலித்து வழிகாட்டுதல்களை அரசு உருவாக்கி வருகிறது. அது, விரைவில் வெளிவரும்.

நீதிபதிகள்: குறிப்பிட்ட இடத்தில் கூட்டம் நடத்த அனுமதித்தது ஏன், அது மாநில நெடுஞ்சாலைக்கு உட்பட்ட பகுதியா, இல்லையா?

ரவீந்திரன்: கரூர் வேலுச்சாமிபுரம் மாநில நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ளது. அந்த இடத்தில் தான் கூட்டம் நடத்த வேண்டும் என, த.வெ.க., தரப்பில் தேர்வு செய்யப் பட்டது.

நீதிபதிகள்: கட்சி பேதமின்றி மக்களை பாதுகாக்க வேண்டியது, சட்டத்தை அமல்படுத்தும் அமைப்பின் கடமை. கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவது அவசியம். மக்கள் நலனே முக்கியம்.

என்.ஆர்.இளங்கோ: நிலையான வழிகாட்டுதல் உருவாக்கும் நடைமுறை முடிவடையும் வரை மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் எவ்வித பொதுக்கூட்டமும் நடத்த அனுமதி வழங்கப் பட மாட்டாது.

இவ்வாறு விவாதம் நடந்தது.

உத்த ரவாதம் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

அரசு நிலையான வழிகாட்டுதல் உருவாக்கும் வரை தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில், எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் எவ்வித பொதுக்கூட்டமும் நடத்த அனுமதி வழங்கக்கூடாது.

அனுமதிக்கப்பட்ட பிற இடங்களில் கூட்டம் நடத்த அனுமதி வழங்கும் போது, குடிநீர், கழிப்பறை, மருத்துவம், ஆம்புலன்ஸ், வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளை நிறைவேற்றுவதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு, கூட்டம் நடத்த ஏற்பாடு செய்வோரிடம் உத்தரவாதம் பெற வேண்டும்.

கரூர் சம்பவம் துரதிர் ஷ்டவசமானது. விசாரணை தற்போது துவக்க கட்டத்தில் உள்ள நிலையில், நீதிமன்றம் தலையிட முடியாது.

விசாரணையில் ஏதாவது குறைபாடு இருந்தால், நீதிமன்றத்தை நாடலாம். அரசியல் சாயம் பூச வேண்டாம். சி.பி.ஐ., விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

இறந்தவர்களின் வாரிசுகளுக்கு தமிழக அரசு தலா, 10 லட்சம், த.வெ.க., சார்பில் தலா, 20 லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு தலா, 2 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

இழப்பீடு வழங்காதபட்சத்தில் அல்லது இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்கக்கோரி, பாதிக்கப்பட்டோர் தரப்பில் நீதிமன்றத்தில் மனு செய்து நிவாரணம் தேடலாம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us