'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் 11,240 குடும்பத்துக்கு காப்பீட்டு அட்டை
'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் 11,240 குடும்பத்துக்கு காப்பீட்டு அட்டை
ADDED : செப் 14, 2025 06:12 AM

சென்னை:'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தில் இதுவரை, 11,240 குடும்பங்களுக்கு முதல்வர் காப்பீட்டு அட்டைகளும், 11,290 மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:
'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தில் இதுவரை, 185 முகாம்கள் நடத்தப்பட்டு, 17 வகையான சிறப்பு மருத்துவ சேவைகள் உட்பட, மக்களுக்கான முழு உடற்பரிசோதனைகள், எவ்வித கட்டணமின்றி வழங்கப்பட்டு உள்ளன; இதில், 3 லட்சம் பேர் வரை பயனடைந்துள்ளனர்.
மேலும் முகாமில், 11,240 குடும்பங்களுக்கு முதல்வர் காப்பீட்டு அட்டைகளும், 11,290 மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.
கருவில் உள்ள சிசுவின் பாலினம் தெரிவித்ததால், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், ஒரு டாக்டர் நடத்தி வரும், 'ஸ்கேன் சென்டரில்' நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது.
சேலம் அரசு மருத்துவமனை டாக்டர் மீது, காவல் துறை வாயிலாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களை யாரும் செய்யக் கூடாது; இது மனிதாபிமானமற்ற செயல்.
இவ்வாறு அவர் கூறினார்.