UPDATED : ஆக 31, 2025 06:50 AM
ADDED : ஆக 31, 2025 06:29 AM

சென்னை: சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவில் கனமழை பெய்தது.
சென்னையின் மணலி, கொரட்டூர், வடபழனி, கத்தியவாக்கம், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு கனமழை கொட்டியது.
இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். நகரின் மணலி, லிம்கா நகர் போன்ற பகுதிகளில் அதிகனமழை பெய்தது
மழை விவரம்
அதிகபட்சமாக மணலியில் 27.செமீ, கொரட்டூர் 18செ.மீ, கத்தியவாக்கம் 14செ.மீ, திருவொற்றியூரில் 13செ.மீ, லிம்கோ நகரில் 26செ.மீ பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
வானிலை மையம் மேலும் அறிவித்துள்ளதாவது:
தென் மாவட்டங்களின் சில இடங்களிலும், வட மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும்,
கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, கோவை மாவட்டம்,
வால்பாறை, சின்கோனா, சின்னக்கல்லார் பகுதியில், தலா 4 செ.மீ., மழை
பெய்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,
தமிழகத்தின் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும்,
இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் பலத்த
தரைக்காற்று வீசும்.
வெப்பநிலையை பொறுத்தவரை, தமிழகம், புதுச்சேரி
மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று அதிகபட்ச வெப்பநிலை, ஒருசில
இடங்களில், 2 முதல் 3 டிகிரி செல் சி யஸ் உயரும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது

