sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

குமரி, நீலகிரி மாவட்டங்களில் கொட்டித்தீர்த்தது கனமழை!

/

குமரி, நீலகிரி மாவட்டங்களில் கொட்டித்தீர்த்தது கனமழை!

குமரி, நீலகிரி மாவட்டங்களில் கொட்டித்தீர்த்தது கனமழை!

குமரி, நீலகிரி மாவட்டங்களில் கொட்டித்தீர்த்தது கனமழை!


UPDATED : நவ 03, 2024 07:58 AM

ADDED : நவ 03, 2024 07:46 AM

Google News

UPDATED : நவ 03, 2024 07:58 AM ADDED : நவ 03, 2024 07:46 AM


Google News

முழு விபரம்

Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டத்தில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்து உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

இன்று

வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தென் தமிழக கடலோரம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

கனமழை

கன்னியாகுமரி

திருநெல்வேலி

தூத்துக்குடி

தென்காசி

தேனி

திண்டுக்கல்

மதுரை

விருதுநகர்

சிவகங்கை

ராமநாதபுரம்

ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனக்கூறியுள்ளது.

மழை அளவு

இன்று காலை 7 மணி வரையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம்( மழையளவு மி.மீ.,ல்)

நீலகிரி

கீழ் கோத்தகிரி எஸ்டேட் -143

கோத்தகிரி -138

அலக்கரை எஸ்டேட்- 137

அடார் எஸ்டேட் -125

பர்லியார்- 123

பில்லிமலை எஸ்டேட் -118

குன்னுார் -105

கோடநாடு- 67

கெத்தை- 54

கின்னக்கொரை -48

சாம்ராஜ் எஸ்டேட் -44

கேத்தி -42

பந்தலுார் -41

ஊட்டி- 37.7

குந்தா பாலம்- 28

அவலாஞ்சி- 21

எமரால்டு- 19

அப்பர் பவானி- 13

கன்னியாகுமரி

கொட்டாரம் -158.6

மைலாடி -110.2

பெருஞ்சாணி -101.4

சுருளக்கோடு- 100

புத்தன் அணை- 98.6

தக்கலை -97

குருந்தன்கோடு- 91

பாலாமோர்- 79.4

அடையாமடை -65.4

சிட்டார்- 1 64.4

மாம்பழத்துறையாறு- 62

குளச்சல்- 62

திற்பரப்பு -61.4

ஆனைக்கிடங்கு -61

கோழிப்போர்விளை- 53.2

குழித்துறை- 53.2

இரணியல்- 52.4

முள்ளங்கிவிளை- 48

முக்கடல் அணை -48

கன்னிமார் -46.8

பூதப்பாண்டி- 35.8

சிவலோகம்- 34.6

நாகர்கோவில்- 34

பேச்சிப்பாறை -30.4

கோவை

பில்லுார் அணை- 67

மேட்டுப்பாளையம்- 52

சிறுவாணி அடிவாரம்- 38

மாக்கினாம்பட்டி -37

வால்பாறை பிஏபி- 28

தொண்டாமுத்துார்- 22

சோலையாறு- 16

பொள்ளாச்சி- 15

போத்தனுார்- 11

பெரியநாயக்கன்பாளையம்- 9.4

ஈரோடு

குண்டேரிப்பள்ளம்- 54

ஈரோடு- 42

பவானி சாகர்- 41.4

சத்தியமங்கலம்- 22

நம்பியூர்- 19

கொடிவேரி- 15

சென்னிமலை- 12

கொடுமுடி- 12

செங்கல்பட்டு

மதுராந்தகம் -17

திருப்போரூர் -15.6

செய்யூர் -12.5

சென்னை

திருவொற்றியூர்- 30.9

தொண்டையார்பேட்டை- 26.7

கத்திவாக்கம்- 25.2

தேனாம்பேட்டை- 24

மாதவரம் -21.6

கொளத்துார் -20.4

கோடம்பாக்கம் -15.4

ஐஸ் ஹவுஸ்- 14.4

மணலி -12.9

வானகரம்- 11.7

வளசரவாக்கம்- 11

கள்ளக்குறிச்சி

மத்தம்பூண்டி -38

மணலுார்பேட்டை- 26

அரியலுார் கேம்ப்- 22

சங்கராபுரம்- 18

ரிஷிவந்தியம் -12

நாமக்கல்

ராசிபுரம் -31.6

நாமக்கல் கலெக்டர் ஆபீஸ்- 28

மங்களபுரம்- 19

புதுச்சத்திரம்- 15

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்- 67

வாலிநோக்கம்- 62.8

முதுகுளத்துார்- 62

கடலாடி -32.2

பரமக்குடி -30.4

பாம்பன் -19.5

கமுதி -15.8

ராமநாதபுரம்- 13

சேலம்

வீரகனுார் -24

தலைவாசல்- 21

வாழப்பாடி- 20

ஏற்காடு -19.6

ஓமலுார்- 15

ஆனைமடுவு அணை- 11

சிவகங்கை

மானாமதுரை- 49

இளையான்குடி -38

சிவகங்கை -31.6

காரைக்குடி -25

திருப்புவனம் -22.2

சிங்கம்புணரி -21.6

தேவகோட்டை- 15.4

துாத்துக்குடி

கயத்தார் -31

சூரன்குடி -20

சாத்தான்குளம்- 19

வைப்பார்- 13

விருதுநகர்

சாத்துார்- 24

பெரியாறு அணை- 15.2

கோவிலங்குளம்- 15

அருப்புக்கோட்டை- 11

அணைகள் நிலவரம்


48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் 42.34 அடியாக நீர்மட்டம் உள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள 42 அடி குண்டேரிபள்ளம் அணை நிரம்பியது. அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவு 6,300 கன அடியில் இருந்து 14 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக கொடிவேரி அணை மூடப்பட்டது. இந்த அணைக்கு 866 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

கனமழை காரணமாக பவானி சாகர் அணைக்கு வந்து கொண்டிருந்த தண்ணீரின் அளவு 4,971 கன அடியில் இருந்து 13,982 கன அடியாக அதிகரித்து உள்ளது. நீர்மட்டம் -92.17 அடிவெளியேற்றம்- 1,200 கன அடி

முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 1,330 கன அடியில் இருந்து 3,402 கன அடியாக அதிகரித்து உள்ளது. நீர்மட்டம் 124.30 அடிவெளியேற்றம் - 1,100 கன அடி

வைகை அணைக்கு நீர்வரத்து 2,120 கன அடியில் இருந்து 2,745 கன அடியாக அதிகரித்து உள்ளது.நீர்மட்டம் -52.30 அடிநீர் இருப்பு-4,057 மில்லியன் கன அடிவெளியேற்றம்-69 கன அடி

சுற்றுலா பயணிகளுக்கு தடை


கனமழை காரணமாக தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us