UPDATED : நவ 07, 2026 06:54 PM
ADDED : நவ 07, 2026 06:17 PM
சென்னை: தஞ்சாவூர், திருவாரூர் உட்பட ஏழு மாவட்டங்களில் நாளை (நவ.8) கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
வளி மண்டல சுழற்சி காரணமாக, இன்று அதிகபட்சமாக துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 9 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 8 செ.மீ., மழை பதிவானது.
தற்போது, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய கேரள கடலோரப் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், துாத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் நாளை கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலுார், பெரம்பலுார், சிவகங்கை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தேனி, துாத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
