ADDED : நவ 30, 2024 10:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கன மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, தமிழக பா.ஜ., தலைமை அலுவலகமான சென்னை தி.நகர் கமலாலயத்தில், உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் எச்.ராஜா அறிக்கை:
'பெஞ்சல்' புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான வழிகாட்டுதல் மற்றும் அவசர உதவிகளுக்கு, கமலாலயத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
உதவி தேவைப்படுவோர், 91500 21835, 91500 21832 ஆகிய மொபைல் போன் எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.