தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு ஹிந்து முன்னணி கண்டனம்
தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்கு ஹிந்து முன்னணி கண்டனம்
ADDED : பிப் 11, 2025 06:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தை ஹிந்துக்கள் போற்றி வருகின்றனர். தற்போது சில இஸ்லாமிய அமைப்புகள், திருப்பரங்குன்றம் மலை மீது சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி கந்துாரி கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளது மலையின் புனிதத்தை கெடுப்பதாக உள்ளது.
அமைதியாக இருக்கும் திருப்பரங்குன்றத்தில் மீண்டும் ஒரு பதட்ட சூழலை உருவாக்கி மதக்கலவரத்தை ஏற்படுத்த தி.மு.க., கூட்டணி கட்சிகளும், ஜமாத் நிர்வாகமும் செயல்படுகிறதோ என்னும் சந்தேகம் எழுகிறது.
மத நல்லிணக்கம் என்னும் பெயரில், வேற்று மதத்தினர் நடைமுறைகளை முருக பக்தர்களிடம் திணிப்பதை கைவிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.