'பெண் பக்தர்கள் கண்ணியம் காப்பாற்றப்பட வேண்டும்' ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
'பெண் பக்தர்கள் கண்ணியம் காப்பாற்றப்பட வேண்டும்' ஹிந்து முன்னணி வலியுறுத்தல்
ADDED : டிச 28, 2024 03:57 AM
திருப்பூர்: ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:
தமிழகத்தில் ராமேஸ்வரம், பழனி, திருச்செந்துார், மதுரை, ஸ்ரீரங்கம், கும்பகோணம் போன்ற புண்ணிய தலங்களுக்கு வழிபட வரும் வசதி குறைந்த எளிய குடும்பத்தினருக்கு, அறநிலையத்துறை உரிய அளவிலான தங்குமிடம், குளியலறை, கழிப்பறை, உடை மாற்றும் அறை போன்ற வசதிகளை செய்து தருவதில்லை.
பக்தர்கள் தனியார் நடத்தும் இடங்களைப் பயன்படுத்துகின்றனர்.இவற்றில், தனிநபர்கள் ரகசிய கேமரா பொருத்தி பெண்களை படம் பிடிக்கும் அவலம் நடக்கிறது.
இதைக்கொண்டு அவர்களை மிரட்டி பணம் பறிக்கவும் வாய்ப்புள்ளது.
அண்மையில், ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடிவிட்டு, தனியார் உடை மாற்றும் அறையில் உடை மாற்றம் செய்த பெண்களை படம் பிடித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது எங்கு வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது.
பக்தர்கள் கண்ணியம் எந்த வகையிலும் பாதிக்காத வகையில், பாதுகாப்பு தர வேண்டியது அறநிலையத் துறையின் கடமை.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

