உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 09, 2026 02:18 AM

அ நிறம் | அளவு
சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே, அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
த.வெ.க., அரசின் தேர்தல் வாக்குறுதியின்படி, கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; மாத ஊதியத்தை, 50,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்; மே மாதம் உட்பட 12 மாதங்களும் ஊதியம் வழங்க வேண்டும் உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் நலச்சங்க பொதுச்செயலர் அருணகிரி கூறியதாவது:
த.வெ.க., அரசு, தேர்தல் வாக்குறுதியின்படி, கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் என்று நம்புகிறோம். வரும் மானிய கோரிக்கையில் இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லையேல், அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு கூறினார்.
