ADDED : நவ 12, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, ஹிந்து சமய அற நிலையத்துறை சார்பில், 16 அர்ச்சகர்கள் உட்பட 47 பேருக்கு, குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
தமிழகத்தில், 225 கோடி ரூபாயில், அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பணியாளர்களுக்கு, 632 குடியிருப்புகள் கட்டும் பணி துவக்கப்பட்டு நடந்து வருகிறது.
இவற்றில், 95 அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் கட்டுமான பணி நிறைவு பெற்றுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, தர்மபுரி மாவட்டங்களில், ஆறு கோவில்களின் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில், 16 அர்ச்சகர்கள் மற்றும், 31 பணியாளர்களுக்கு, நேற்று தலைமை செயலகத்தில், குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர்பாபு மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

