UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 07:26 PM
– நமது நிருபர் –
புதுக்கோட்டை மாநகராட்சியில், பொதுமக்கள், சுற்றுலா பயணியருக்காக, பிரமாண்ட பசுமை பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தமிழகத்தில் திருச்சி, திருப்பூர், புதுக்கோட்டை மாநகராட்சிகளில் பிரமாண்ட பசுமை பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, புதுக்கோட்டை மாநகராட்சியில், பூங்கா, இயற்கை நடைபாதை, திறந்தவெளி அரங்கம், சுற்றுச்சூழல் கண்காட்சி மையம், மூலிகை தோட்டம், பாறை தோட்டம், நறுமண தோட்டம், பசுமை இல்லம், மூடுபனி அறை, குழந்தைகள் விளையாட்டு தளம் என, 30க்கும் மேற்பட்ட அம்சங்களுடைய ஒருங்கிணைந்த பூங்கா அமைய உள்ளது.
இவை அனைத்தும் புதுக்கோட்டை பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் விதமாக அமைக்கப்பட உள்ளது. இதற்காக, புதுக்கோட்டை – மருப்பிணி சாலையில், 19 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு, 40 கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. திட்ட அறிக்கை தயாரிக்கும் நிறுவனத்தை தேர்வு செய்ய, டெண்டர் கோரப்பட்டுள்ளது.
