உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : நவ 06, 2026 07:12 PM
ADDED : நவ 05, 2026 06:47 PM
அ நிறம் | அளவு
சென்னை: ஹிந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் கமிஷனராக இருந்த ரவிச்சந்திரன், தமிழ்நாடு வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விடுப்பில் இருந்த சராயு, பேரூராட்சிகள் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநராக இருந்த பழனி, சாலை மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசு பணிக்கு செல்ல, கே.பி.கார்த்திகேயன் என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த உத்தரவை, தலைமைச் செயலர் சாய்குமார் பிறப்பித்துள்ளார்.
