ADDED : நவ 11, 2024 06:17 PM

சென்னை: தமிழகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 6 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுலாத்துறை ஆணையர் சமயமூர்த்தி, மனித வள மேலாண்மைத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேசிய சுகாதார இயக்கக இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ், சுற்றுலாத்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தொழிலாளர் துறை ஆணையர் அதுல் ஆனந்த், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, கால்நடைத்துறை முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சமக்ர சிக்சா திட்ட மாநில இயக்குனர் ஆர்த்தி, துணை முதல்வரின் துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக சுகாதார திட்ட இயக்குனர் அருண் தம்புராஜ், தேசிய சுகாதார இயக்கக இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்