'ஹிந்துக்கள் ஒன்றிணைந்தால் அகன்ற பாரதம் சாத்தியம்' வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய இயக்குநர் நம்பிக்கை
'ஹிந்துக்கள் ஒன்றிணைந்தால் அகன்ற பாரதம் சாத்தியம்' வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய இயக்குநர் நம்பிக்கை
ADDED : ஆக 16, 2025 01:35 AM

சென்னை:“நாட்டில் உள்ள ஹிந்துக்கள் ஒன்றிணைந்தால், அகன்ற பாரதம் சாத்தியமாகி விடும்,” என, வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய இயக்குநர் பால.கவுதமன் தெரிவித்தார்.
வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் மற்றும் ஸ்ரீ வெப் தொலைக்காட்சி சார்பில், 'சபதம் ஏற்பு தினமும், வீர வணக்க நாளும்' என்ற தலைப்பில், சிறப்பு சொற்பொழிவு சென்னையில் நடந்தது. அதில், வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய இயக்குநர் பால. கவுதமன் பேசியதாவது:
ஒற்றுமை அனைவரும் ஒற்றுமையாக இருந்தபோது, நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருந்தது. பிரிட்டிஷ்காரர்கள் வருகைக்கு பின், ஹிந்து - முஸ்லிம் பிரிவினைவாதத்தை விதைத்து, ஒற்றுமையை சுரண்டினர்.
அதை முறியடித்து, சுதந்திரம் பெறப் போராடிய போது, முஸ்லிம்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானப்படுத்த பேச்சு நடத்தப்பட்டது. அப்போது, கொல்கட்டாவில், முஸ்லிம்களால் கலவரம் பெரிதாக்கப்பட்டது. ஹிந்துக்களின் ஒற்றுமையால், அது முறியடிக்கப்பட்டது.
அதேபோல், இங்குள்ள காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட அ ரசியல் கட்சியினர், ஹிந்துக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து, ஹிந்துக்களை ஹிந்து உணர்வற்றவர்களாக்கி, ஒருமைப்பாடு என்ற பெயரில், பயங்கரவாதம் வளர்ப்போருக்கு துணை நிற்கின்றனர்.
அதை முறியடிக்க, வரும் தேர்தலில், ஹிந்துக்களின் எதிரிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருந்தால், அடுத்த 50 ஆண்டுகளில் அகன்ற பாரதம் சாத்தியமாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பா.ஜ., மாநில பொதுச்செயலர் ராம.சீனிவாசன் பேசியதாவது:
அடிமை இந்தியாவில் வாழ் ந்த பாரதியார், சுபிட்சமான பாரத தேவி குறித்து பேசினார்.
அகன்ற பாரதம் தான், நம் பாரத மாதா. அதற்கான அறிகுறியாகத்தான் அயோத்தி ராமர் கோவில், காசி யாத்திரை, சி.ஏ.ஏ., மற்றும் வக்ப் சட்டத்திருத்தம் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது, அமெரிக்கா, நம் மீது அதிக வரி விதிக்கிறது.
தகுந்த பாடம் நாம், அமேசான் உள்ளிட்ட அமெரிக்க நிறுவன வணிக தளங்கள், அமெரிக்க பல்கலைகள், மென்பொருட்கள் உள்ளிட்டவற்றை புறக்கணித்தால், அமெரிக்காவின் வரி தானாகவே விலகிவிடும்.
இதுபோல், நம்மை அடிமைப்படுத்தும் வகையில் பயம் காட்டுவோருக்கு, நம் பலத்தை காட்டுவதுதான், நம் நாட்டை வலுப்படுத்துவதற்கான வழி.
ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தி, ஹிந்துக்களை தரக்குறைவாக சித்தரிக்கும் வைரமுத்து உள்ளிட்டோருக்கு, வரும் தேர்தலுக்கு பின் தகுந்த பாடம் கற்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தேசிய சிந்தனை யாளர் பேரவை தலைவர் ஓமாம்புலியூர் ஜெயராமன் பேசியதாவது:
சென்னை ஆர்.எஸ்.எஸ்., அலுவலகம், கடந்த 1993ல் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. அதற்கு மூளையாக செயல்பட்டவர்கள் இமாம் அலி மற்றும் ஹைதர் அலி.
அந்த குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவர்கள், மதம் மாற்றப்பட்ட ஹிந்துக்கள். தற்போது, கும்பகோணத்தில், ராஜாமுகமது, பீட்டர் ரமேஷ் உள்ளிட்டோர், ஹிந்துக்களை மதம் மாற்றுவதுடன், அவர்களை பயங்கர வாதத்துக்கு பழக்கி வருகின்றனர்.
இதுகுறித்து புகார் அளித்தால், தி.மு.க., மற்றும் எஸ்.டி.பி.ஐ., உள்ளிட்ட கட்சிகளின் போர்வையில், அப்பாவி மக்களுடன் செ ன்று, வழக்கு பதியவிடாமல் தடுக்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.