sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஒரே மொழியை திணித்தால் பல நாடுகள் பிறக்கும் நாம் தமிழர் சீமான் சர்ச்சை பேச்சு

/

ஒரே மொழியை திணித்தால் பல நாடுகள் பிறக்கும் நாம் தமிழர் சீமான் சர்ச்சை பேச்சு

ஒரே மொழியை திணித்தால் பல நாடுகள் பிறக்கும் நாம் தமிழர் சீமான் சர்ச்சை பேச்சு

ஒரே மொழியை திணித்தால் பல நாடுகள் பிறக்கும் நாம் தமிழர் சீமான் சர்ச்சை பேச்சு


ADDED : மார் 07, 2024 01:26 AM

Google News

ADDED : மார் 07, 2024 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக்க கோரி, சென்னை எழும்பூரில் நடந்து வரும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:

தமிழை மீட்க வேண்டியதும் காக்க வேண்டியதும் கடமை. தங்கள் நிலத்தில் தாய் மொழியை பேசுவதற்கும், வழிபடுவதற்கும் உரிமை உள்ளது. மொழிவாரி மாநிலங்கள் அதற்காகவே பிரிக்கப்பட்டன. இதை பேசினால், பிரிவினைவாதம் பேசுவதாக கூறுகின்றனர்.

இப்போது, நான் சொல்கிறேன். பல மொழிகள் இருந்தால் தான் இந்தியா ஒரே நாடாக இருக்கும். ஒரே மொழி என்று திணித்தால், பல நாடுகள் பிறக்கும். அதை எந்த கொம்பனா லும் தடுக்க முடியாது. இதை ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வண்டும்.

நாங்கள் பிரிவினை பேசுகிறோம் என்று சொன்னால்; அதை பேசுவதற்கு துாண்டுபவர்கள் ஆட்சியாளர்களே. இந்த போராட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. அதிகாரமற்றவர்கள் போராடத்தான் முடியும். அதிகாரத்தில் இருப்பவர்கள், அதை செயல்படுத்தி கொடுக்க வேண்டும்.

தி.மு.க., 18 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தில் இருந்துள்ளது. பிரதீபா பாட்டில், பிரணாப் முகர்ஜி என, இரண்டு ஜனாதிபதிகளை தேர்வு செய்துள்ளது. இருவரும் கையெழுத்து போட்டிருந்தால், தமிழில் வழக்காடும் சட்டம் வந்திருக்கும்.

அப்துல் கலாமிடம் போராடுபவனை விட போராட துாண்டுபவன் தான் ஆபத்தானவன்.

அதிகாரம் மிக வலிமையானது. அதை அடைந்து விட்டால், அனைத்தும் எளிதானது. வேண்டிய, விரும்பிய துறைகளை பெற்று, அதிகாரத்தை அனுபவித்தவர்கள், இந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

அய்யா வைகுண்டர் குறித்து தவறான தகவல்களை, கவர்னர் ரவி கூறுகிறார். அவர் ஐ.பி.எஸ்., படித்து எழுதினாரா; பார்த்து எழுதினாரா என்று நான் கேட்டதற்கு பதில் இல்லை. 'இந்திய மொழிகளில் தமிழ் தான் தொன்மையானது' என பிரதமர் மோடி, உலகம் முழுதும் சென்று பேசுகிறார்.

ஆனால், புதிதாக கட்டிய பார்லிமென்ட் கட்டடத்தில், ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதத்தில் மட்டுமே கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது; அங்கு தமிழ் இல்லை. இதற்கு அண்ணாமலை பதில் சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us