ADDED : மார் 22, 2025 03:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழக பா.ஜ., சார்பில், இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, சென்னை எழும்பூரில் வரும், 25ம் தேதி மாலை நடக்கிறது.
இதில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இப்தார் நோன்பு நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பாளரும், பா.ஜ., விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில தலைவருமான அமர் பிரசாத், நேற்று அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு தலைவர் பன்னீர்செல்வம், அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து, நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.