கிருஷ்ணகிரி வன்கொடுமை: சிறப்புக்குழு விசாரணை துவக்கம்
கிருஷ்ணகிரி வன்கொடுமை: சிறப்புக்குழு விசாரணை துவக்கம்
ADDED : ஆக 22, 2024 11:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை துவங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் ஐ.ஜி., பவானீஸ்வரி மற்றும் பல்நோக்கு குழு தலைவரும், சமூக நலத்துறை செயலாளருமான ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் துவங்கியுள்ளது.
இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள், மருத்துவ குழுவினர், மனநல ஆலோசனைக் குழு, போலீசார் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.