தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/சட்டவிரோத கல்லறை தோட்டம் தடை கோரும் ஹிந்து முன்னணி

சட்டவிரோத கல்லறை தோட்டம் தடை கோரும் ஹிந்து முன்னணி

சட்டவிரோத கல்லறை தோட்டம் தடை கோரும் ஹிந்து முன்னணி


UPDATED : அக் 20, 2026 09:08 PM

ADDED : அக் 20, 2026 09:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2026 09:08 PM ADDED : அக் 20, 2026 09:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ‘கோவை மாவட்டம், நல்லூர்வயல் பகுதியில், சட்டவிரோதமாக சர்ச், கல்லறை தோட்டம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்’ என, ஹிந்து முன்னணி சார்பில், மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அம்மனுவில் உள்ளதாவது:

கோவை மாவட்டம், பேரூர் தாலுகாவுக்கு உட்பட்ட, நல்லுார்வயல் பகுதியில், ‘காருண்யா’ நிர்வாகத்தின் சார்பில், ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மற்றும் விவசாய பகுதியில், நீர்வழிப்பாதைக்கு அருகில் கல்லறை தோட்டம் அமைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

மேலும், சட்டத்திற்கு புறம்பாக சர்ச் கட்டுவதுடன், நல்லுார்வயல் மலைவாழ் மக்களின் குலதெய்வமான சடையாண்டியம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையையும், மத்வராயபுரம் ஊராட்சிக்கும் ஆலாந்துறை பேரூராட்சிக்கும் இடைப்பட்ட நொய்யல் ஆற்றின் கிளை நதியான மசஎறும்பு ஓடையின் குறுக்கே நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, அனுமதி பெறாமல் பாலம் கட்டப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக அப்பகுதியில் மத மோதல்கள் ஏற்படும் சூழல் உருவாகி, சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதால், உடனடியாக இதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் உள்ளது.

இதுதொடர்பாக, ஹிந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஸ் கூறியதாவது:

கல்லறை தோட்டம் அமைக்க முயற்சிக்கும் பகுதியில், 20 கிறிஸ்துவ குடும்பங்கள் உள்ளன. ஆனால், 500க்கும் மேற்பட்ட ஹிந்து குடும்பங்கள் உள்ளன. வசிப்பிடத்திற்கு அருகே கல்லறை தோட்டம் அமைப்பது, அப்பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதை தடுத்து நிறுத்த முற்பட்டபோதும், சமீபத்தில் ஒரு உடலை புதைத்துள்ளனர். காருண்யா பெரிய நிறுவனம் என்பதால், பலமுறை புகார்கள் அளித்தும், அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.

எனவே, கல்லறை தோட்டம் அமைப்பதை தடுத்து, அப்பகுதியில் மதமோதல் ஏற்படா வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us