ADDED : ஜன 21, 2024 09:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:''அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா, வரலாற்றில் மறக்க முடியாத முக்கியமான நாள்,'' என, நடிகர் ரஜினி தெரிவித்தார்.
அயோத்தியில் நடக்கும் ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க, நடிகர் ரஜினி நேற்று பகல், 12:15 மணிக்கு, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் லக்னோ புறப்பட்டு சென்றார். அவருடன் மனைவி லதா, மருமகன் தனுஷ் மற்றும் குடும்பத்தினர் சென்றனர்.
முன்னதாக, விமான நிலையத்தில், ரஜினி அளித்த பேட்டி:அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு செல்வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. பல ஆண்டுகளாக இருந்த பிரச்னையில், உச்ச நீதிமன்றம் தலையிட்டு தீர்வு கொடுத்துள்ளது. ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு மகிழ்ச்சியுடன் செல்கிறோம். இந்த நாள் வரலாற்றில் மறக்க முடியாத, ஒரு முக்கியமான நாளாக இடம் பெற்றுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

