தேசிய அளவில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை
தேசிய அளவில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை
ADDED : பிப் 20, 2025 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தேசிய அளவில் உத்தரகாண்டில் நடந்த போட்டியில், பதக்கம் வென்ற, தமிழக வீரர் - வீராங்கனையருக்கு, உயரிய ஊக்கத்தொகையாக, 4.35 கோடி ரூபாய் வழங்கும் விழா, சென்னையில் நடந்தது.
உத்தரகாண்டில் 38வது தேசிய விளையாட்டு போட்டி, கடந்த மாதம் துவங்கி, இம்மாதம் 14ம் தேதி நிறைவடைந்தது. அதில், தமிழகம் உட்பட 37 அணிகள் பங்கேற்றன.
தமிழகத்தை சேர்ந்த, 158 வீரர் - வீரங்கனையர் பங்கேற்றனர். இதில், 92 வீரர் - வீராங்கனையர் பதக்கம் வென்று அசத்தினர். அவர்களை கவுரவிக்கும் வகையில், உயரிய ஊக்கத்தொகையாக, 4.35 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்கியது.
இதற்கான விழா, நேற்று சென்னை, பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனையருக்கு, தமிழகத் துணை முதல்வர் உதயநிதி, அவர்கள் பெற்ற பதக்கத்திற்கேற்ப ஊக்கத்தொகையை வழங்கினார்.

