'கொடை' யில் இடைவிடாது மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
'கொடை' யில் இடைவிடாது மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ADDED : ஜன 09, 2024 02:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானலில் நேற்று காலை முதலே விட்டு விட்டு பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கொடைக்கானலில் ஒரு வாரமாக அடர் பனிமூட்டத்துடன் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதலே சாரலுடன் மிதமான மழை பெய்தது. மதியத்தியற்கு பின் ஆங்காங்கே கனமழை கொட்டியது.
நகரை சூழ்ந்த பனிமூட்டத்தால் எதிரேவரும் வாகனங்கள் தெரியாத நிலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன. சுற்றுலா பயணிகள் விடுதிகளிலே முடங்கினர். ரோட்டில் மழை நீர் பெருக்கெடுத்தது. முக்கிய அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. குடை பிடித்தப்படி சில பயணிகள் சுற்றுலா தலங்களை ரசித்தனர்.