கொரோனா பரவலுக்கு பின் மாரடைப்பு பாதிப்பு அதிகரிப்பு
கொரோனா பரவலுக்கு பின் மாரடைப்பு பாதிப்பு அதிகரிப்பு
ADDED : ஜன 04, 2024 11:03 PM

இதயம் காப்போம் திட்டம் துவங்கப்பட்டு, 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 8,713 துணை சுகாதார நிலையங்களில், மாரடைப்புக்கான முன் அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு மருந்துகள் தரப்படுகின்றன. அந்த வகையில், 4,886 பேருக்கு மருந்துகள் வழங்கப்பட்டு காப்பாற்றப்பட்டு உள்ளனர்.
உலக சுகாதார நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும், கொரோனா தடுப்பூசி போடப்பட்டதற்கும், மாரடைப்பிற்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்துள்ளன.
ஆனால், இதயவியல் நிபுணர்களின் கருத்துப்படி, கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 2019க்கு பின், ஒவ்வொரு குடும்பத்திலும் உயிரிழப்பு, வருவாய் இழப்பு, சிறுதொழில்கள் மூடல் போன்ற காரணங்களால் மன அழுத்தம், மன உளைச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. அதன் வாயிலாக, மாரடைப்புகள் ஏற்படலாம் என, மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வரும் காலங்களில் நோய் பாதிப்பை கண்டறிவது குறித்த உலக மருத்துவ மாநாடு, வரும் 19, 20, 21ம் தேதிகளில் சென்னையில் நடக்க உள்ளது. இதில், பல்வேறு நிபுணர்கள் பங்கேற்று ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட உள்ளனர்.
- மா.சுப்பிரமணியன்,
அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை.