ADDED : அக் 22, 2024 02:36 AM

சென்னை: விளைச்சல் அதிகரிப்பால், செவ்வாழை பழங்கள் வரத்து அதிகரித்து, கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், செவ்வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இவை உள்ளூரில் விற்பனை செய்யப்படுகின்றன.
இதுதவிர, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து, செவ்வாழை பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. கடந்த சில மாதங்களாக, செவ்வாழை விளைச்சல் குறைந்திருந்தது.
இதனால், கிலோ செவ்வாழை 120 முதல் 150 ரூபாய் வரை விற்கப்பட்டது. சில்லரை விலையில், ஒரு பழம் 25 முதல் 30 ரூபாய் வரை விற்கப்பட்டது. இந்நிலையில், தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலும், செவ்வாழை அறுவடை களைகட்டி வருகிறது.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு, அவற்றின் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால், கிலோ செவ்வாழை விலை குறைந்து, 70 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. வரும் நாட்களில் ஏலக்கி, கற்பூரம், ரஸ்தாலி உள்ளிட்ட பழங்களின் வரத்தும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.