இந்திய கம்யூ., வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிடப்படும் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேட்டி
இந்திய கம்யூ., வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியிடப்படும் மாநிலச் செயலாளர் முத்தரசன் பேட்டி
ADDED : மார் 17, 2024 07:43 AM
விருதுநகர் : இந்திய கம்யூ., சார்பில் லோக்சபா தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நாளை வெளியிடப்படும் என மாநிலச்செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
விருதுநகரில் மேலும் கூறியதாவது:
2014 லோக்சபா தேர்தலின் போது ஆண்டிற்கு 2 கோடி பேருக்கு வேலை, கருப்புப்பணத்தை மீட்டு தலா ரூ. 15 லட்சம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறியதை பத்து ஆண்டுகளாக பிரதமர் மோடி நிறை வேற்றவில்லை. முன்னாள் பிரதமர்கள் நேரு, வாஜ்பாய் உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்து வருகிறது. மெட்ரோ ரயில்வே பணிகளுக்காக எவ்வித நிதியும் வழங்கவில்லை. சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகளின் வளர்ச்சி நிதியை காட்டிலும் குறைவான நிதியே தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்படுகிறது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ., அதிக நன்கொடை பெற்றுள்ளது. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக், இதே தொழிலை அ.தி.மு.க., ஆட்சியில் செய்து கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து கண்காணித்து கடத்தலை தடுக்காமல் தற்போது தி.மு.க., ஆட்சியை குறை சொல்வது நியாயமில்லை. மத்திய அரசு துாண்டுதலில் தேர்தல் நேரத்தில் வேண்டுமென்றே அமலாக்கத்துறை உள்ளிட்டவை தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்துகிறது. இந்திய கம்யூ., சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்றார்.

