sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உங்கள் வீட்டுக்கு வரும் பால் சுகாதாரமாக உள்ளதா

/

உங்கள் வீட்டுக்கு வரும் பால் சுகாதாரமாக உள்ளதா

உங்கள் வீட்டுக்கு வரும் பால் சுகாதாரமாக உள்ளதா

உங்கள் வீட்டுக்கு வரும் பால் சுகாதாரமாக உள்ளதா

1


ADDED : நவ 10, 2024 02:54 AM

Google News

ADDED : நவ 10, 2024 02:54 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பசுவின் மடியில் இருந்த கறந்த பால் மிகவும் சுகாதாரமான முறையில் நுகர்வோரின் வீடுகளை அடைகிறதா என்பது மிகவும் முக்கியம். இதனை கண்காணிக்க ஓரைட் (Oright) என்ற ஸ்டார்ட்அப் கம்பெனி பல செயல்களை வடிவமைத்துள்ளார்கள்.

ஓரைட் (ORIGHT) என்ற இந்த ஸ்டார்ட்அப் கம்பெனி, கால்நடை ஊட்டச்சத்து தயாரிப்புகள், இன்சூரன்ஸ் மற்றும் கடன்கள் உட்பட அனைத்து கால்நடைத் தேவைகளையும் ஒரே இடத்தில் வழங்குகின்றனர்.

கால்நடைகள் சிறந்த தரமான உற்பத்தியை தரும் வகையில் பல்வேறு பிரபலமான பிராண்டுகளின் பச்சை தழைப்பயிர்களில் (சிலேஜ்) இருந்து தயாரிக்கப்படும் தீவனத்தை வழங்குகின்றனர். இது கால்நடைகள் , செம்மறி ஆடுகளுக்கு உணவாக அளிக்கப்படுகிறது.

இவர்களின் 'பின்டெக்' சேவை பயனுள்ள கனெக்டிவிட்டி மற்றும் டேட்டா சேமிப்பு ஆகியவைகளை விவசாயிகளுக்குக் டாஷ்போர்டு போன்ற தகவல்களை கொடுக்கிறது. இதனை கொண்டு விவசாயிகள் சிறு-நேரக் கடன்களுக்கு எளிதாக விண்ணப்பிக்கவும், அவற்றை தவணைகளில் திருப்பிச் செலுத்தவும் உதவுகிறது. விவசாயிகள் கடன் சுழலில் விழுவதைத் தடுக்கவும் கால்நடை காப்பீட்டு வசதிகளையும் இவர்கள் வழங்குகின்றனர்.

வெளிப்படைத்தன்மை


இவர்களின் நிகழ்நேர டேட்டா அனைத்து சப்ளை செயின் பங்குதாரர்களுக்கும் எளிதில் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்கிறது, இது முழுமையான வெளிப்படைத்தன்மையை வழங்குகிறது. இவர்களின் IoT- இயக்கப்பட்ட இயந்திரங்கள் மற்றும் சாதனங்கள், பால் கலவையை அடையாளம் காணவும், கலப்படம் போன்றவற்றைக் கண்டறியவும் மற்றும் ரெகார்ட் செய்யும் நோக்கங்களுக்காக மொபைல் போன் / இணைய பயன்பாட்டிற்கு மாற்றவும் முடியும்.

இவர்களின் சேவைகளைப் பயன்படுத்துவதன் வாயிலாக, பால் உற்பத்தித் துறையில் உள்ளவர்கள் டிரான்ஸ்பரன்சி, டிரேசபிலிட்டி, தரக் கட்டுப்பாடு மற்றும் விநியோகச் சங்கிலியில் செயல்திறன் ஆகியவற்றில் பயனடையலாம். விவசாயிகளுக்கு அதிகாரம் அளித்து, பண்ணையில் இருந்து நாட்டு மக்களுக்கு சுத்தமான பாலை உருவாக்க உதவுகிறது.

கொள்முதலில் இருந்து சப்ளை வரை, எல்லாமே விரல் நுனியில், முழுத்தரவுகளும் கிளவுட் வழியாக இணைக்கப்பட்டுள்ளன. இவர்களின் ORIGHT மொபைல் போன் அப்ளிகேஷன், அனைத்து பங்குதாரர்களுக்கும் எல்லா நேரங்களிலும் சரியான தகவலை வைத்திருப்பதை உறுதிசெய்கிறது, இந்த அப்ளிகேஷனை எந்த நேரத்திலும், எங்கும் அணுகலாம்.

இந்த கம்பெனி இதுவரை, 10 கோடி லிட்டர் சுத்தமான பாலை சேகரிக்க உதவியுள்ளனர். ஏறத்தாழ, ஒரு லட்சம் விவசாயிகள் சிறந்த பால் உற்பத்தி மூலம் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளனர். 5 ஆயிரம் கிராமங்களை பால் உற்பத்தியில் டிஜிட்டல் முறையாக்கி உள்ளனர். தொடர்பு கொள்ள: 95991 - 98856, info@qboid.io மற்றும் www.oright.io

விவரங்களுக்கு இ-மெயில்: sethuraman.sathappan@gmail.com



அலைபேசி: 98204-51259 இணையதளம் www.startupandbusinessnews.com

- சேதுராமன் சாத்தப்பன் -






      Dinamalar
      Follow us