'செஞ்சி கோட்டை வன்னியர் கட்டியது என்பதற்கான ஆதாரம் உள்ளதா'
'செஞ்சி கோட்டை வன்னியர் கட்டியது என்பதற்கான ஆதாரம் உள்ளதா'
ADDED : ஜூலை 21, 2025 06:50 AM

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் யாதவ மக்கள் இயக்க நிறுவனர் ராஜாராம் கூறியதாவது:
செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். ஆனால், மராட்டிய மன்னர்கள் கட்டிய 12 கோட்டைகளில் செஞ்சி கோட்டையும் ஒன்று என, பிழையாக கூறியுள்ளனர்.
கி.பி.,1190 ஆண்டு ஆனந்தகோன் என்பவர் செஞ்சி கோட்டையை கட்டினார். அவருக்குப்பின், அவரது வம்சா வழியினர் 300 ஆண்டுகள் செஞ்சி கோட்டையை ஆட்சி செய்தனர். இந்திய தொல்லியல் துறையும், பிரெஞ்ச் வரலாற்று ஆய்வாளர் மெக்கன்சியும் இதை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளனர்.
தமிழக முதல்வரும் வரலாற்றை ஆய்வு செய்யாமல் வரவேற்று வாழ்த்து சொல்லி இருப்பது எந்த வகையில் நியாயம். தமிழக முதல்வர் தொல்லியல் துறையினருடன் நேரடியாக செஞ்சி கோட்டையில் ஆய்வு செய்ய வேண்டும்.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், காடவன் என்ற வன்னியன் கட்டிய கோட்டை என தெரிவித்துள்ளார். இதுவரை அவர் எந்த கூட்டத்திலாவது செஞ்சி கோட்டையை வன்னியர்கள் கட்டியது என வரலாற்றை பதிவு செய்ததுண்டா. அதற்கான ஆதாரங்கள் உள்ளதா, இருந்தால் வெளியிட முடியுமா. இவ்வாறு அவர் கூறினார்.