ADDED : ஆக 24, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக அமைச்சர், ரகுபதி கூறியதாவது:
தி.மு.க.,வின் வேரை அசைத்துப் பார்க்க முடியாது. அந்த வேர் ஆழமானது; அந்த வேர் எங்கு உள்ளது என்பதை கூட அமித் ஷாவால் கண்டறிய முடியாது. ஸ்டாலினுக்கு பிறகு, உதயநிதி தான் தமிழக முதல்வராக பொறுப்பேற்பார். எத்தனை அமித் ஷாக்கள் வந்தாலும், அதை தடுக்க முடியாது.
ஏற்கனவே முதல்வர் ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை என்று சொன்னார்கள். அதனால், அவர் முதல்வர் ஆக வாய்ப்பே இல்லை என, மக்கள் மத்தியில் அ.தி.மு.க., தலைவர்கள் பிரசாரமே செய்தனர். ஆனாலும், அவர் முதல்வரானார். அதேபோலவே, உதயநிதியும் முதல்வர் ஆவார். பா.ஜ., குறுக்கு வழியில், ஆட்சியில் இருப்பவர்களை மிரட்டிப் பார்க்கிறது. அவர்களுடைய பதவியை பறித்து, ஆட்சிக்கு வர முடியுமா என யோசிக்கின்றனர். அது, பகல் கனவாகவே முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
-நமது நிருபர் -