ADDED : ஜூலை 24, 2024 08:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லோக்சபா தேர்தலில் தேனி மக்கள் ஏமாற்றியதாக நினைக்கவில்லை. பணநாயகத்தை ஜனநாயகம் வெல்ல முடியவில்லை. வரும் காலங்களில், தேர்தல் மற்றும் அரசியல் அணுகுமுறை மாற்றப்படும்.
பா.ஜ., கட்சி அ.தி.மு.க.,வை அழிக்க பார்க்கிறது என்பது பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. பழனிசாமி எனும் சுயநலவாதி தலைமையில் உள்ளவரை ஒருங்கிணைப்பிற்கு வாய்ப்பில்லை. ஜெயலலிதா தொண்டர்கள் ஒன்றிணைய தடையாக இருப்பவர் பழனிசாமி தான். சசிகலா சுற்றுப்பயணம் செல்வது அவரது ஆசை.
மத்திய பட்ஜெட் அனைவரது முன்னேற்றத்திற்கான, தொலைநோக்கு பட்ஜெட். பல மாநிலங்களுக்குமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டசபை தேர்தலுக்குப்பின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் அமையும்.
தினகரன்,
பொதுச்செயலர், அ.ம.மு.க.,

