ADDED : ஜூன் 27, 2025 05:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சி எம்.எல்.ஏ., ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்தியதாக, ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில், ஜெகன்மூர்த்தி மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் தொடர்புடைய ஆதாரங்களை போலீசார் தாக்கல் செய்தனர். இதனையடுத்து ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது.