ADDED : பிப் 09, 2024 01:39 AM

சென்னை:''நாடு தழுவிய 'ஜெய் ஜவான்' பிரசாரம், மார்ச் 20ம் தேதி நிறைவடையவுள்ளது,'' என, அகில இந்திய காங்கிரஸ் ஆராய்ச்சித் துறை தலைவர் எம்.வி.ராஜிவ் கவுடா கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
மத்திய அரசு, 'அக்னிபாத்' திட்டத்தின் வாயிலாக, ஒரு லட்சத்து 50,000 இளைஞர்களின் கனவுகளை சிதைத்து விட்டது. ஆயுதப் படைகளுக்கு முந்தைய ஆள்சேர்ப்பு முறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
அக்னி வீரர்களின் ஓய்வுக்கு பின், பணிக்கொடை, ஓய்வூதிய பலன்கள் எதுவும் கிடைக்காது. கடந்த 2022 - 23ல் ராணுவத்தில் சேர விண்ணப்பித்தவர் எண்ணிக்கை, 34 லட்சமாக இருந்தது; 2023 - 24ல் 10 லட்சமாகக் குறைந்துள்ளது.
ராணுவத்தின் மீதான இளைஞர்களின் நாட்டம் குறைந்து வருவதை இது காட்டுகிறது. எனவே தான், ஜனவரி 31ம் தேதி, ஜெய் ஜவான் பிரசாரத்தை ராகுல் துவக்கினார். அவரது பிரசாரம், மூன்று கட்டங்களாக மார்ச் 20ம் தேதி வரை நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

