ADDED : ஜன 05, 2024 12:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:மதுரை மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் தை மாதம் நடத்தப்படுகிறது.
இந்தாண்டு ஜன., 15ல் அவனியாபுரம்; 16ல் பாலமேடு பேரூராட்சி; 17ல் அலங்காநல்லுாரில் போட்டிகள் நடக்க உள்ளன. இப்போட்டிகள் பாரம்பரியமாக நடைபெறும்; அந்தந்த பகுதியிலேயே நடைபெறும். இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. மாடுபிடி வீரர்கள், காளைகள் பதிவு குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் மூலமாக விரைவில் அறிவிக்கப்படும்.
இத்தகவலை கலெக்டர் சங்கீதா தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே, ஜல்லிக்கட்டு போட்டியின் போது தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்க உத்தரவிடக் கோரி தாக்கலான வழக்கில், மனுவை தமிழக அரசு பரிசீலிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.