தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/‘டாஸ்மாக்’ கடைகளில் இனி ‘ஜில்’ பீர் கிடைக்கும்

‘டாஸ்மாக்’ கடைகளில் இனி ‘ஜில்’ பீர் கிடைக்கும்

‘டாஸ்மாக்’ கடைகளில் இனி ‘ஜில்’ பீர் கிடைக்கும்


UPDATED : நவ 14, 2026 09:36 PM

ADDED : நவ 14, 2026 09:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 09:36 PM ADDED : நவ 14, 2026 09:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக அரசின் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு 400 லிட்டர் கொள்ளவு உடைய, ‘கூலர்’ சாதனம் எனப்படும் குளிர்ப்பதனப் பெட்டிகளும், 375 கடைகளுக்கு, 100 லிட்டர் கொள்ளளவில், குளிர்ப்பதன பெட்டிகளும் வழங்கப்பட்டன.

பல கடைகளில் முறையாக பராமரிக்கப்படாததால், கூலர் சாதனங்கள் பழுதாகி விட்டதுடன், பயன்படுத்தப்படாமலும் உள்ளன. இதனால் பல கடைகளில் குளிர்ச்சியான பீர் விற்கப்படுவதில்லை. இந்த வாய்ப்பை சாதகமாக பயன்படுத்தி, டாஸ்மாக் கடைகளை ஒட்டி செயல்படும், ‘பார்’ எனப்படும் மதுக்கூடங்களில் குளிர்ச்சியான ‘பீர்’ முறைகேடாக விற்கப்படுகிறது. ஒரு பீர் பாட்டில், அரசு நிர்ணயம் செய்துள்ள விலையை விட, 50 ரூபாய் வரை கூடுதலாக விற்கப்படுகிறது.

இதனால், ‘குடி’மகன்கள் பாதிக்கப்படுகின்றனர். இதையடுத்து, அனைத்து கடைகளிலும், புதிய கூலர் சாதனங்கள் வைக்க, டாஸ்மாக் முடிவு செய்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us