தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மொபைல் செயலி முடக்கம் மின் கட்டணம் செலுத்துவதில் சிக்கல்

மொபைல் செயலி முடக்கம் மின் கட்டணம் செலுத்துவதில் சிக்கல்

மொபைல் செயலி முடக்கம் மின் கட்டணம் செலுத்துவதில் சிக்கல்


ADDED : நவ 14, 2026 09:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2026 09:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழக மின் வாரியத்தின், மொபைல் போன் செயலி இன்று (நவ.,14) முடங்கியதால், மின் கட்டணம் செலுத்த முடியாமல், பலரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

தமிழக மின் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை, நுகர்வோர் மின் கட்டண மையங்கள், அரசு, ‘இ – சேவை’ மையங்கள் மட்டுமின்றி, அதன் இணையதளம், மொபைல் போன் செயலி மற்றும் யு.பி.ஐ., வாயிலாக, டிஜிட்டல் முறையில் செலுத்தலாம். டிஜிட்டல் முறையில் எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும், கட்டணம் செலுத்தலாம்.

மின் வாரியத்தின் மொபைல் போன் செயலியில், மின் கட்டணத்தை மட்டுமின்றி, மின் தடை உள்ளிட்ட மின்சார சேவைகள் தொடர்பாக, புகாரும் அளிக்கலாம். இதனால் பலரும், அந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இன்று மின் வாரிய மொபைல் போன் செயலி செயல்படவில்லை.

இது குறித்து, தமிழக முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர் சடகோபன் கூறுகையில், ‘‘மின் வாரிய மொபைல் போன் செயலி, நேற்று செயல்படாமல் முடங்கியது. பலரும் கட்டணம் செலுத்த முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். இதுதொடர்பாக வந்த புகார்கள், மின் வாரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us