ADDED : செப் 05, 2025 02:10 AM
சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் எழுதியுள்ள கடிதம்:
எம்.ஜி.ஆர்., வழியில், அடுத்தடுத்த இரண்டு சட்டசபை தேர்தலில் வென்று, சாதனை படைத்தவர் ஜெயலலிதா. அவரது திறமையை நாம் அனைவரும் அறிவோம். நாம் அனைவரும் அ.தி.மு.க., என்ற குடும்பத்தின் உறுப்பினர்கள்.
அ.தி.மு.க., பொதுச்செயலராக தாங்கள் சிறப்பாக செயலாற்றி வருகிறீர்கள். அ.தி.மு.க.,வின் தலைவர் என்பதை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள். அதை நாங்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
அ.தி.மு.க., வெற்றி பெற்று, நீங்கள் முதல்வராக வேண்டும் என்பதே, ஒவ்வொரு தொண்டனின் விருப்பம்.
இன்றைய சூழலில், அ.தி.மு.க.,விலிருந்து பிரிந்து சென்ற தொண்டர்களையும் சேர்த்துக் கொண்டால் வெற்றி எளிதாகும். இதை மக்களும், தொண்டர்களும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.
பொறுப்பில் உள்ளவர்கள் வெளியில் சொல்ல தயங்கிக் கொண்டிருக்கின்றனர். ஒற்றுமை, நம்பிக்கை, ஒரே நோக்குடன் செயல்பட்டால் வெற்றி உறுதி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.