மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு கோயில் ஊழியர்களிடம் நீதிபதி விசாரணை
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு கோயில் ஊழியர்களிடம் நீதிபதி விசாரணை
ADDED : ஜூலை 03, 2025 01:11 AM

திருப்புவனம்:மடப்புரம் கோயில் பாதுகாப்பு தனியார் நிறுவன ஊழியர் கொலை வழக்கில் கோயில் ஊழியர்களிடம் மீண்டும் மீண்டும் நீதிபதி விசாரணை நடத்தினார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் பாதுகாப்பு தனியார் நிறுவன ஊழியர் அஜித்குமார் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்தார். இந்த வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் திருப்புவனத்தில் நேற்று காலை 10:20 மணி முதல் விசாரணை நடத்தினார். இரவு வரை விசாரணை நடந்தது.
முதலில் ஏ.டி.எஸ்.பி., சுகுமார் அழைக்கப்பட்டு வழக்கு விபரங்கள் , ஆவணங்கள் , கோயில் சி.சி.டி.வி., ஹார்ட் டிஸ்க்குகள் பெறப்பட்டன. போலீசார் தாக்குதலை அலைபேசியில் பதிவு செய்த சக்தீஷ்வரனிடம் விசாரணை நடந்தது. தொடர்ச்சியாக கோயில் ஊழியர் பெரியசாமி, உதவி ஆணையர் கார் டிரைவர் கார்த்திக், கோயில் சி.சி.டி.வி., கண்காணிப்பாளர் சீனிவாசன், காரை பார்க் செய்த ஆட்டோ டிரைவர் அருண், அஜித்குமாருடன் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பிரவீன் ஆகியோரிடம் விசாரணை நடந்தது. ஊழியர்களிடம் விசாரணை முடிந்தாலும் பக்கத்து அறையில் தங்க வைக்கப்பட்டு மீண்டும், மீண்டும் அழைத்து விசாரணை நடத்தினார். விசாரணை இன்றும் நடைபெற உள்ளது.

