ADDED : ஜன 22, 2024 01:04 AM
சென்னை : தமிழக உரிமையியல் நீதிமன்றங்களில், உரிமையியல் பதவிகளில், 245 காலியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் கடந்த ஆண்டு ஆக., 19ல், முதல்நிலை தகுதி தேர்வு நடந்தது.
இதில், 12,000 பேர் பங்கேற்றனர். இதற்கான முடிவுகள் அக்டோபரில் வெளியாகின. தேர்வில், 2,500 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பரில் பிரதான தேர்வு நடந்தது. இதன் முடிவுகள், ஜன., 4ல் வெளியாகின. இதில், அடுத்து நடக்க உள்ள நேர்முக தேர்வுக்கு, 472 பேர் தேர்வாகி உள்ளனர்.
இவர்களுக்கு வரும், 29ம் தேதி முதல் பிப்., 10 வரை, நேர்முக தேர்வு நடக்க உள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., செயலர் கோபால சுந்தர்ராஜ் அறிவித்துள்ளார். பட்டியலில் இடம் பெற்றுள்ள தேர்வர்கள், அசல் சான்றிதழ்களை எடுத்து வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.