இன்று ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் கமல்: 'கன்னிப் பேச்சு'க்கு தன் பாணியில் பதில்
இன்று ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் கமல்: 'கன்னிப் பேச்சு'க்கு தன் பாணியில் பதில்
ADDED : ஜூலை 25, 2025 02:00 AM

சென்னை: ''பார்லிமென்டில் என் கன்னிப் பேச்சு, எதை மையப்படுத்தி இருக்கும் என்பதை இப்போது இங்கு சொல்லக்கூடாது. சில விஷயங்கள் இங்கு பேசுவது போல் அங்கு பே சக்கூடாது, '' என நடிகர் கமல் தெரிவித்தார்.
தி.மு.க., கூட்டணி சார்பாக, மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல், ராஜ்ய சபா எம்.பி.,யாக, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பார்லிமென்டில் இன்று அவர், ராஜ்யசபா உறுப்பினராக பதவி ஏற்கிறார்.
இதற்காக, நேற்று காலை சென்னையில் இரு ந்து டில்லி புறப் பட்டுச் சென்றார்.
அப்போது, சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:
செய்தியாளர்கள் அனைவரும் செய்தி சேகரிக்க மட்டும் வராமல், என்னை வாழ்த்தி அனுப்புவதற்கும் வந்திருப்பதாக நான் நினைக்கிறேன்; அதற்கு நன்றி. மக்களின் நல்வாழ்த்து களுடன், நான் டில்லி சென்று உறுதிமொழி எடுத்து, என் பெயரை பதிவு செய்யவே ராஜ்யசபாவுக்கு செல்கிறேன்.
ஒரு இந்தியனாக எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மரியாதையையும், கடமையையும், நான் செய்யப் போகிறேன்.
இதை பெருமை யுடன் நான் சொல்லிக் கொள்கிறேன். என் கன்னிப் பேச்சு, எதை மையப்படுத்தி இருக்கும் என்பதை, இப்போது இங்கு சொல்லக்கூடாது.
சில விஷயங்கள் இங்கு பேசுவது போல் அங்கு பேசக்கூடாது; அங்கு பேசுவது போல் இங்கு பேசக்கூடாது.
ராஜ்யசபா எம்.பி., பதவியில் நான் இருந் து செயல்படும், என் ஆறாண்டு கால பயணத்தை கவனித்தால், நான் எதை நோக்கி செல்லப் போகிறேன் என்பது புலப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.