ADDED : ஜன 04, 2025 08:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தி.மு.க., துணைப் பொதுச்செயலரும், பார்லிமென்ட் தி.மு.க., குழு தலைவருமான கனிமொழி, இன்று தன் 57வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
பிறந்த நாளை முன்னிட்டு இன்று காலை, தன் அண்ணன் முதல்வர் ஸ்டாலினை, அவரது இல்லத்தில் சந்தித்து, வாழ்த்து பெறுகிறார். அதை தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்துகிறார்.
ஆழ்வார்பேட்டை இல்லத்தில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்துகளை பெறுகிறார். கட்சியினர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கனிமொழி, ஏழை, எளியவர்களுக்கு பல்வேறு உதவி பொருட்களை வழங்க இருப்பதாக, தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.

