sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கனிமொழி பிறந்த நாள்: அமைச்சர்கள் வாழ்த்து

/

கனிமொழி பிறந்த நாள்: அமைச்சர்கள் வாழ்த்து

கனிமொழி பிறந்த நாள்: அமைச்சர்கள் வாழ்த்து

கனிமொழி பிறந்த நாள்: அமைச்சர்கள் வாழ்த்து

1


ADDED : ஜன 05, 2025 11:41 PM

Google News

ADDED : ஜன 05, 2025 11:41 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தி.மு.க., துணை பொதுச்செயலரும், எம்.பி.,யுமான கனிமொழி பிறந்த நாளையொட்டி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். முதல்வர் ஸ்டாலினை கனிமொழி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பார்லிமென்ட் தி.மு.க., குழு தலைவர் கனிமொழி, தன் 57வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.

மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி, அண்ணாதுரை நினைவிடங்களுக்கு சென்று, மலர் துாவி மரியாதை செலுத்தினார்.

அங்கு, தி.மு.க., மகளிர் அணியினர் வழங்கிய புறாக்களை பறக்க விட்டார். ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு சென்று, அவரிடம் வாழ்த்து பெற்றார்.

சி.ஐ.டி., காலனியில் உள்ள கருணாநிதி இல்லத்தில், அமைச்சர்கள் பெரியசாமி, தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், பன்னீர்செல்வம், சேகர்பாபு, ராஜா, கீதா ஜீவன், முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் போன்றோர் கனிமொழியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அதேபோல, எம்.பி.,க்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி, அருண், அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் நிர்வாகிகளும், கனிமொழியை சந்தித்து வாழ்த்து கூறினர். கனிமொழி வீட்டின் முன், நாட்டுப்புற கலைஞர்கள் நடனமாடி, வந்தவர்களை வரவேற்றனர்.

தமிழகம் முழுதும் இருந்து திரண்டு வந்த கனிமொழி ஆதரவாளர்கள், நீண்ட வரிசையில் நின்று அவருக்கு பிறந்த நாள் பரிசுகளை வழங்கினர்.

வாழ்த்து தெரிவிக்க வந்தவர்களுக்காக, காலையில், 1,000 பேருக்கு, இட்லி, பொங்கல், பூரி, வடை; மதியம், 3,000 பேருக்கு, மட்டன் பிரியாணி, சிக்கன் வறுவலுடன் விருந்து வழங்கப்பட்டது.

கனிமொழியின் தீவிர ஆதரவாளரான பெப்சி முரளி ஒட்டிய போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில், 'இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அக்கா' என்ற வாசகம், கனிமொழி தன் ஆள்காட்டி விரலை நீட்டி ஆவேசமாக பேசும் படம், அவரது படத்திற்கு பின்னால், பள்ளிகளில் பயன்படுத்தப்படும் கரும்பலகை இடம் பெற்றிருந்தது.

அதில், 'பொலிட்டிக்கல் கிளாஸ்' என்ற வாசகம் அச்சிடப்பட்டிருந்தது. மாணவர்கள் வரிசையில், விஜய், சீமான், அண்ணாமலை, பழனிசாமி ஆகியோர் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றிருந்தது.

'கேக்'கில் எதிர்க்கட்சியினர் படம்

பெப்சி முரளி ஏற்பாடு செய்திருந்த போஸ்டர் வடிவில் அப்படியே, பூந்தமல்லி ஒன்றிய கவுன்சிலரும், கனிமொழியின் தீவிர ஆதரவாளருமான வி.ஜி.ரவி ஏற்பாட்டில், 'கேக்' தயார் செய்யப்பட்டிருந்தது. அந்த கேக்கை தன் வீட்டின் வளாகத்தில், தொண்டர்களை சந்திப்பதற்காக அமைக்கப்பட்ட மேடையில் வைத்து, கனிமொழி வெட்டினார். அவர் கேக் மீது கத்தி வைத்திருக்கும் புகைப்படம் வேகமாக பரவியது. எதிர்க்கட்சித் தலைவர்களின் புகைப்படத்துடன் இருந்த கேக்கை, கத்தியால் கனிமொழி வெட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.








      Dinamalar
      Follow us