ADDED : பிப் 04, 2024 01:48 AM

சென்னை: கரைவெட்டி பறவைகள்சரணாலயத்தை,ராம்சர் தளமாக அறிவித்ததை நினைவுகூரும்வகையில் சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.
ஈர நிலங்களைப்பாதுகாக்க, 1971ல் ஈரான் நாட்டின், ராம்சர் என்ற நகரில், 'ராம்சர் சாசனம்' எழுதப்பட்டது. உலகஅளவில் ஈர நிலங்களைப் பாதுகாப்பதே இதன்நோக்கம்.
இது குறித்து, அஞ்சல்துறை அறிக்கை:
அரியலுார் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டிபறவைகள் சரணாலயம், 453 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள ஈரநிலம். 500க்கும் மேற்பட்ட தாவரங்கள், விலங்கினங்களின் சரணாலயமாக இது செயல்படுகிறது.
அதன் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் உணர்ந்து தமிழக அரசு, 1999ல் கரைவெட்டி பறவைகள் சரணாலயமாகஅறிவித்தது.
கடந்த, 1982ல் ராம்சர்மாநாட்டில் இந்தியா கையெழுத்திட்டது.
கடந்த ஜன., 31ல் மாநாட்டின் வாயிலாக கரைவெட்டி பறவைகள் சரணாலயம், அதிகாரப்பூர்வமாக ராம்சர் தளமாக அறிவிக்கப்பட்டது.
ஆண்டுதோறும் பிப்., 2ம் தேதி, உலக ஈர நில தினமாக கொண்டாடப்படுகிறது.
அதை முன்னிட்டு, அரியலுார் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் குறித்த சிறப்பு அஞ்சல் உறையை, மத்தியஅஞ்சல் மண்டல தலைவர்நிர்மலாதேவி வெளியிட்டார்.
முதல் உறையை மாவட்ட வன அதிகாரி இளங்கோவன் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் அஞ்சல்துறை, வனத்துறைஅதிகாரிகள் பங்கேற்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.