கரூர் உயிரிழப்பு சம்பவம் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை
கரூர் உயிரிழப்பு சம்பவம் இன்ஸ்பெக்டரிடம் விசாரணை
ADDED : நவ 27, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக, போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட, நான்கு பேரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கடந்த, செப்., 27ல், கரூரில் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் கரூரில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர்.
அவர்கள், த.வெ.க., முன்னணி நிர்வாகிகளான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்ட, 400க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
நேற்று, கரூர் நகர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், கரூர் சம்பவம் குறித்து, சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட, கோவையை சேர்ந்த ராகுல்காந்தி, கோகுலக்கண்ணன், கரூர் மாவட்ட தே.மு.தி.க., நிர்வாகி நவலடி ஆகியோரிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பெற்றனர்.

